புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வித் தத்துவம்

'கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே'
என்பது ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார் வாக்கு. மக்களுக் குரிய வீரவாழ்க்கை - பெருமித வாழ்க்கையை கொடுக்கும் நான்கினுள் ஒன்று கல்வி. அக்கல்வி கரையிலது; ஆனாற் கற்பவர் நாட்சிலது. ஆகையாற் கற்பவை கற்பதற்கு ஆசான்துணை இன்றியமையாதது. அத்துடன் இளமையிற் கற்கும் சிறார்க்கு ஆசிரியர் உதவி அத்தியாவசிய மானதாகும். 
ஆசான், தான் கற்பிக்கும் பாடத்தில் மட்டும் வல்லவனாக இருந்தாற் போதாது. பாடத்தைப் போதிக்கும் முறையிலும் தேர்ந்தவனாக இருத்தல் வேண்டும். மேலும், சிறந்த ஆசிரியன் கற்பித்தலுடன் மட்டும் நின்றுவிட் டால் இன்றியமையாதது. ஏனெனில் தன் மாணாக்கர்களை  'உயர் நிலைக்கு உய்விப்பானே' சிறந்த ஆசானாவான். ஆகையால் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் சிறந்த கல்வியை மட்டும் பெற்றிருந்தாற் போதும் என்று அமையாது, ஆசிரியத் தொழிலுக்குரிய பயிற்சியையும் பெற்றுத் தம்மைத் தொழிற்றகைமையுடையவர்களாக ஆக்கிக்கொள்ளல் வேண்டும். 
கல்வியின் அடிப்படைக் கோட்பாடுகளை அறிந்துகொள்ளல், ஆசிரிய தொழிற் பயிற்சியின் ஒரு முக்கிய அங்கமாக இன்று விளங்குகின்றது. இதிற் கல்வித் தத்துவம் என்கின்ற கல்வி மொழியியலும் உள்ளடங்கும். 
'கல்வித்தத்துவம்' என்னும் இந்நூற் கல்வித்தத்துவம் பயில்வோருக்குப் பயன்படக்கூடும். ஆனால் இது எந்த ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்திற்கும் அமைய எழுதப்பெற்ற நூலன்று. பாடநூலாகவோ அல்லது கல்வித்தத்துவம் புகட்டும் ஆசிரியர்களது கைந்நூலாகவோ அமைய வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதப் பெற்றதுமன்று. இந்நூலை யான


க.குணராசா ( செங்கை ஆழியான் )
Kunarasa, K

கந்தையா குணராசா ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலில் செங்கை ஆழியான் ஆக அடையாளம் காட்டுபவர். இவர் சிறுகதை, நாவல், ஆய்வு, தொகுப்பு எனப் பன்முக்க் களங்களில் இயங்குபவர். இவரது படைப்பாளுமையால் மிக வெற்றிகரமான எழுத்தாளர் எனும் அந்தஸ்துக்கு உரித்தானவர். 1960களின் நடுப்பகுதியில் இருந்து இன்றைய காலம்வரை செங்கை ஆழியான் பெயரைத் தவிர்த்து ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படமுடியாது.

இவர் தொகுத்த மறுமலர்ச்சிக் கதைகள், ஈழகேசரிக்கதைகள், முன்னோடிச் சிறுகதைகள் போன்றவை ஈழத்துச் சிறுகதை வரலாற்றை மீள் வாசிப்புக்கு உள்ளாக்கும் விமரிசனப் பண்புகள் கொண்டவை. இத்தொகுப்பு முயற்சியில் இவர் ஈடுபட்டதன் மூலம் இலக்கிய வரலாறு எழுதியலுக்குப் புதுவளம் சேர்க்கின்றார். இதன் பிறிதொரு அடையாளமாகவே ஈழத்துத் தமிழ் சிறுக